தொலைத் தொடர்பு கோபுரம்
இலங்கைசெய்திகள்

யாழில் எதிர்ப்புக்கு மத்தியில் எழும் தொலைத் தொடர்பு கோபுரம்

Share

தொலைத் தொடர்பு கோபுரம்!

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை (01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டுவரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நெருக்கமாகக் குடிமனைகள் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு அதனை அமைத்து வரும் நிறுவனத்திடம் கோரி இருந்தனர்.

இதேவேளை அப் பணிகளை நிறுத்துமாறு சுன்னாகம் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனாலேயே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Presidential Pardon for 197 Inametes In View of 74th Independence Day 1
செய்திகள்அரசியல்இலங்கை

78-வது சுதந்திர தினம்: 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு!

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தின்கீழ் 49 கைதிகளுக்குப் பொது...

624255490 1466493095479966 5510710955406618043 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக நெடுங்கேணியில் மக்கள் போராட்டம்: அரசுக்கு எம்பி சாணக்கியன் கடும் எச்சரிக்கை!

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய கிவுல் ஓயா (Kiul Oya) நீர்த்தேக்கத் திட்டத்தை மீண்டும்...

MediaFile 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கச்சத்தீவு திருவிழாவில் அரசியல் வேண்டாம்! – இந்திய மீனவர்களுக்கு வட மாகாண கடற்றொழில் இணையம் வேண்டுகோள்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ...

MediaFile 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூவர் கைது: கடற்படையினரின் விசேட நடவடிக்கை!

மன்னார், நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளை வைத்திருந்த...