இலங்கையின் சட்ட அமைப்பில் வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை குறைப்பதற்காக சட்டங்களை இணைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் வேலைத்தளத்தில் நடைபெறக்கூடிய வன்முறைகள், துன்புறுத்தல்களை குறைப்பதற்கு சட்டம் நிறைவேற்றப்ப்ட்டது.
குறித்த சட்டத்தை இலங்கையின் சட்ட அமைப்பில் இணைப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை சட்ட அமைப்பில் இணைத்து கொள்வதற்கு முன்னர் நீண்ட விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews