தேர்தலுக்கு தடை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Bar association 0911

தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரச நிதியை கையாள்வதாகக் கூறி கடந்த வாரங்களில் அரசாங்கம் எடுத்த பல தீர்மானங்கள்,  தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் விளைவை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் இறையாண்மையை பாதிக்கும் வகையில், சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேர்தலை தடுக்கும் இத்தகைய முயற்சிகள் முன்னெப்போதும் இடம்பெற்றதில்லை என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version