தனியார் பஸ் சேவை முடங்கும் நிலையில்!

தனியார் பஸ் சேவை

டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ் சேவைகளை பத்து வீதமாகக் குறைக்க நேரிட்டுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து டீசல் கிடைக்காவிடத்து நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலக நேரிடும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எனினும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பஸ்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளது என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version