அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பஸ்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கினால், எதிர்வரும் இரண்டு வாரங்களில் தற்போதைய பஸ் கட்டணத்தை விட குறைந்த விலையில் அலுவலக சேவையை வழங்க முடியும்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவினால் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை.போக்குவரத்து சிரமம் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாதது மிகவும் வேதனையான நிலை – என்றார்.
#SriLankaNews