பேருந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிப்பு

tamilni 281

பேருந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிப்பு

நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணங்கள் சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதனால் பேருந்து கட்டணங்கள், முச்சக்கர வண்டி கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் உள்ளிட்ட சகல கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளன.

இதன்படி எரிபொருட்கள் மீது 18 வீதம் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும், போக்குவரத்து கட்டணங்களைப் போன்றே வாகன உதிரிப் பாகங்களின் விலைகளும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போதைய நிலைமைகளில் பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 10 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் காலங்களில், பேருந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version