கைதிகள் கொலை மிரட்டல் – ஐ.நா. கடும் கண்டனம்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில் கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் ஐ.நா. வதிவிட ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தனது ருவிற்றர் பதிவில்,
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை. இந்த சம்பவத்தால் இதனை இலங்கை அரசு தவறிவிட்டது. சிறையில் உள்ள அனைவரின் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும். கைதிகளை தவறாக நடத்துவதை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வேன் என மிரட்டியுள்ளார். அத்துடன் சிறைக்கைதிகள் இரண்டு பேரை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஆகியோர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment