அரசை பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது தங்காலை கால்டன் சுற்றுவட்டத்தில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews