நாட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ஏற்க வேண்டும்! – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

muruththettuwe ananda thero 1

” பஸில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சை பறித்து, அவருக்கு வேறொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கவும். அதேபோல நாட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்க வேண்டும்.”

இவ்வாறு அபயராக விகாரையின் பிரதான விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்களை இந்த அரசு தொடர்ந்தும் வதைத்தால், ஆட்சியை விரட்ட நாம் பின்நிற்கமாட்டோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் பொறுப்பேற்க வேண்டும். பஸில் ராஜபக்சவுக்கு அபீவருத்தி அமைச்சு பதவி வழங்கலாம்.

31 ஆம் திகதி மஹாசங்கத்தினர் ஒன்றுகூடவுள்ளோம். இதன்போது அரசு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version