மருந்து பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

Medicine

நாட்டில் மருந்து பொருட்களின் விலைகள் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பின் மூலம், பரசிட்டமோல், அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட 60 மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2015 ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் இந்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version