அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைப்பு!

Supermarket Prices Trade Goods 02

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு இணையாக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு  விரைவில் குறைக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ரூபாயின் பெறுமதி அதிகரித்ததைத் தொடர்ந்து பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது.

பெரும்பான்மையான மக்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் தான் கொள்வனவு செய்கின்றனர்.

உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்ப, மிளகாய் போன்ற பொருட்கள் நேரடியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

டொலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும் என்றும், அதன் பயனை நுகர்வோர் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version