23 64f75a991e97a
இலங்கைசெய்திகள்

தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்கிறார் பிள்ளையான்!

Share

தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்கிறார் பிள்ளையான்!

என்னைப் பொறுத்த வரையில் அதிபர் தேர்தல்தான் முதலில் நடைபெறும் என பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று (09.04.2024) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைளயில், சில நேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம்.

நமது கட்சியானது பிராந்திய ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் எமது முடிவுகளை மக்களின் நலன் கருதி எடுப்போம்.

இலங்கை வரலாற்றில் நம்பிக்கையுடன் வந்த அதிபர் தோற்று வெளியேறினார் என்பது முக்கியமான அடையாளமாக பதியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எவ்வாறான குழப்பங்கள் வந்தாலும் வராமல் போனாலும் எவ்வாறான நிலைமைகள் வரும்போதும் நாம் அதனைச் சந்திக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மயிலத்தமடு மாதவனை விவகாரங்களில் பிள்ளையான் பாராமுகமாக செயற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...