ஜனாதிபதி தெரிவு! – தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை கூடுகிறது

Mano

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு நாளை (19) அறிவிக்கப்படவுள்ளது.

இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடவுள்ளது

20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி இதன்போது முடிவெடுக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version