வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

tamilni 582

வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளாராக களமிறங்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆதரவற்றவர் எனவும் இதனை அவர் நன்கு அறிந்திருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சார நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளையும் தனது கட்சி முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மக்கள் ஆதரவற்ற தற்போதைய ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தான் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், இது கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்து அல்ல எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version