13 10
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

Share

ஜனாதிபதி தேர்தலுக்காக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வருவோர் வாக்காளர் அட்டையின்றி வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெஃப்ரல் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு இடம்பெறும் தினத்தன்று மதியம் நாடு திரும்பும் வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

தமது கடவுச்சீட்டை வாக்களிப்பு நிலையங்களில் காண்பித்து, குறித்த தினத்தில் நாடு திரும்பியதை உறுதிப்படுத்த முடியும்.

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பின் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க முடியும். எனவே, எவரும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என எண்ண வேண்டாம் என நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...