நாளை பதவி விலகுகிறார் ஜனாதிபதி!

Gotabaya Rajapaksa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டார்.

சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்படி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version