நாடு திரும்பிய ரணில்! கட்டுநாயக்கவில் பலத்த பாதுகாப்பு!!

Untitled 1 22

ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26.06.2023) அதிகாலை 5.30 மணி அளவில் நாடு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலையத்தை அண்டிய பகுதிகள், கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை என்பனவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு கடமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விமான படை உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version