தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 16ஆவது அமர்வு இன்று (டிசம்பர் 15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வின் போது, நாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கியப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பான முன்மொழிவுகள் இடம்பெற்றன.
தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல். 2005 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்துதல்.
இந்த அமர்வு, நாட்டின் எதிர்கால அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.