ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (05) நாடாளுமன்றம் வருகை தந்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
சபை நடவடிக்கை ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னர், ஜனாதிபதி அவைக்கு வந்தார்.
ஆளுங்கட்சியின் முன்வரிசையில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் அமர்ந்து, சபை நடவடிக்கையை அவதானித்தார்.
#SriLankaNews