8 9 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

Share

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

அதிபர் தேர்தலை குழப்பி பிற்போட முயற்சித்தால் சிறிலங்கா (Sri Lanka) அதிபரையும் இந்த அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) அரச தரப்பைப் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, அதிபர் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும், அதுதான் அரசமைப்பு ஏற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று (11) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், “சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது.

இந்தநிலையில் அதிபர் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய தேவை எதுவும் இல்லை.

அதிபரின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற அரசமைப்பின் 83 (ஆ) பிரிவு இவ்விடயங்களில் சம்பந்தப்பட்டது அல்ல.

அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதை மாற்றி அமைப்பதாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற கருத்து இருந்ததாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதை மாற்றாமல் அப்படியே விடுகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) இணக்கத்தோடு தான் அப்படியே அதை விட்டு விட முடிவு எடுக்கப்பட்டது. அதனால் சர்ச்சைகளோ குழப்பங்களோ ஏதுமில்லை.

ஏற்கனவே சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்ட விடயம். இந்த 83 (ஆ)பிரிவு அரசமைப்பில் இருப்பதால் எந்தக் குழப்பமும் புதிதாக வந்து விடாது.

ஆனால், இந்தப் பிரிவுக்கு திருத்தம் கொண்டு வருகின்றோம் என்று குழம்பத்தை ஏற்படுத்த அதிபரின் தரப்பு முயலுகின்றனர் என்று தோன்றுகின்றது.

அந்தப் பிரிவைத் திருத்த சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிலைப்பாடு வருமானால், அதைக் காட்டி தம்முடைய பதவிக்காலம் 5 வருடங்கள்தானா என்பதை ஒட்டிய சர்ச்சையைக் கிளப்பலாம் என்று அதிபர் எண்ணுகின்றார்.

எது, எப்படி என்றாலும், நாடு வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் அதிபர் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அது சட்ட ரீதியான கட்டாயம்.

அதில் கை வைக்க அல்லது தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி எடுக்கப்பட்டால் அரசையும் அதிபரையும் மக்கள் வீதி வீதியாக துரத்தி அடிப்பார்கள். ஓட ஓட விரட்டுவார்கள். அதனை முன் எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...

25 67b4e515720bd
இலங்கைஅரசியல்செய்திகள்

இனவாத அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிந்தது அரசாங்கம் – அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்! – எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்கியதைக் கண்டித்து, இலங்கைத்...

images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...