ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்

Share

ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச் செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் நிமால் லான்சா ஆகியோரின் தலைமையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தான் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிய முடிகின்றது.

மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூவர் அந்த வீட்டுக்குப் பொறுப்பாக நிறுத்தப்பட்டு அவர்களின் ஊடாகப் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு வலை வீசுதல் உட்பட பல வேலைத்திட்டங்கள் இந்த வீட்டில் இருந்து தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அறிய முடிகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...