tamilni 351 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு ஜனாதிபதியிடம் இருந்து தகவல்

Share

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு ஜனாதிபதியிடம் இருந்து தகவல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன்படி வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர்.

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவை ஆகும்.

அதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அணிசேரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டா தலைநகர் கம்பாலாவிற்கு ஜனாதிபதி விஜயம் செய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 25 கிலோ ‘பொன்கொரண்டி’ மீட்பு: சீனாவுக்குக் கடத்த முயன்றவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சீனாவுக்குக் கடத்த முயன்ற 25...

07 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்கப் பரிந்துரை: நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சாதாரண மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து...

06 18
செய்திகள்இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 20 சதவீதம் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை (Container Transport...

05 20
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு போர் 4-வது வாரத்தை எட்டியது: 22 நாடுகள் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலியக் கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் இன்றுடன் 4-வது...