‘டிட்வா’ (Didwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு, மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட ஜனாதிபதி பணிக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 31ஆம் திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடருக்குப் பிந்திய வழிமுறைகளை ஒருங்கிணைத்தல், அரச நிறுவனங்களின் முயற்சிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மறுகட்டமைப்பு திட்டங்களைத் துரிதமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதை உறுதி செய்தல்.
இந்தப் பணிக்குழுவின் தலைவராகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உயர்மட்டக் குழுவில் பின்வருவோர் உள்வாங்கப்பட்டுள்ளனர் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், மாகாண மட்டத்திலான உயர் அதிகாரிகள், முக்கிய அரசு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த பொதுப் பணியாளர்கள்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை விரைவாகக் கொண்டு வருவதற்காக, ஏனைய பங்குதாரர்களுடனும் சிவில் அமைப்புகளுடனும் இணைந்து இந்தப் பணிக்குழு மிக நெருக்கமாகச் செயற்படும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.