வலிமேற்கில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!!

WhatsApp Image 2022 01 25 at 10.39.25 AM

வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமானது. இன்றைய கூட்டத்தினை இடை நிறுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரியும், சம்பள அதிகரிப்பை கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் என பலர் முன் பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றோம்.்

30 வருடங்களுக்கு மேலாக சேவையைச் செய்து ஓய்வுபெறும் வயதிலும் முன்பள்ளி ஆசிரியர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

நமக்கு வெறும் ஆறாயிரம் ரூபாவே வேதனமாக வழங்கப்படுகின்றது. தற்கால விலைவாசி அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆறாயிரம் ரூபா ஆறு நாட்களுக்காவது போதுமா?

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் கடந்த பிரதேச சபை அமர்வில் தீர்மானம் எடுத்துள்ளோம். அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்.

ஒரு குழந்தை தாயிடம் இருந்து அடுத்த படியாக முன்பள்ளி ஆசிரியர்களிடமே வருகின்றது. ஒரு தாய் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் நாங்கள் அந்த மாணவர்களுக்கு செய்கின்றோம். ஆனால் எங்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

எனவே புதிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நமது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் – என்றனர்.

போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version