மோட்டார் போக்குவரத்து சேவைகளை பெற இணையவழியில் முற்பதிவு

DMT

இலங்கையிலுள்ள அனைத்து மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை பெறுவதற்கு நேரத்தை ஒதுக்க தன்னியக்க இணையத்தளம் மற்றும் தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திணைக்களத்தின் சேவைகளைப் பெறஅலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்னர், dmtappointments.dmt.gov.lk எனும் இணையத்தின் மூலம் முற்பதிவு செய்து மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 21 17 116 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முற்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் சேவையை பெற முன்பதிவு செய்ய உள்ளோர் 011 – 21 17 116 என்றவாறு தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தன்னியக்க முற்பதிவு தொலைபேசி சேவையானது திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான அலுவலக சேவைகளுக்கு மாத்திரம் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட அலுவலகங்களுக்கும் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சேவை தற்போது நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் தன்னியக்க இணைய மற்றும் தொலைபேசி ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இதன்போது பயநர்கள் முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version