இலங்கைசெய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – ரணில் உறுதி

24 1
Share

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – ரணில் உறுதி

மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya) விளையாட்டரங்கில் நேற்று காலை (01) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீ஬லங்கா’ ஜனாதிபதி வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ” மலையக மக்களை பொறுத்தவரையில் பலர் தற்காலிக நாட்சம்பளம் குறித்து பேசி வரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான ஒரு நிரந்தர தீர்வு என்னும் அடிப்படையில் 1700 ரூபா சம்பளத்தினை பெற்று தந்துள்ளார்.

மேலும், மலையக மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, தற்போது வன்னி மாவட்ட பகுதிகளில் உள்ள நிலப்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தருவார்” என கூறியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...