ரணிலுக்கு ஆதரவு கோரி உயர் ரக குதிரைகள் மூலம் பிரசார நடவடிக்கை

18

ரணிலுக்கு ஆதரவு கோரி உயர் ரக குதிரைகள் மூலம் பிரசார நடவடிக்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து உயர் ரக வெள்ளைக்குதிரைகள் மூலம் தினமும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை பகுதியில் (31.08.2024) ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்திற்கு மன்னர் கூட்ட அழைப்பிற்காக குதிரைகளை ஏற்பாட்டாளர்கள் காட்சி பொருளாக பயன்படுத்தி மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து குறித்த உயர் ரக வெள்ளைக்குதிரைகள் வருகை தந்துள்ளதுடன் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி இந்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன் வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரசாரம் செய்யப்படுகின்றது.

அதேவேளை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை அவர் ஆதரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version