12 27
இலங்கைசெய்திகள்

காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலி கொட : ஆரம்பமானது விசாரணை

Share

காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலி கொட : ஆரம்பமானது விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட(prageeth Eknaligoda) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கிரிதல இராணுவ முகாமின் முன்னாள் தளபதி ஷம்மி குமாரரத்ன மற்றும் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணை நேற்று முன்தினம் (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பமானது.

 

உயர் நீதிமன்ற நீதிபதி கலாநிதி நாமல் பலாலே தலைமையிலான நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், இரண்டு பிரதான தொலைபேசி நிறுவனங்களின் அதிகாரிகள் இருவர், கடத்தலின் போது குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பித்து சாட்சியமளித்தனர்.

 

ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோர், பாதுகாப்பு தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகளாவர்.

 

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதாக ஏற்றுக்கொண்ட போதிலும், தொலைபேசி கோபுரங்கள் தொடர்பான முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட வரைபடங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

 

அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்க தலைமையில் தொலைபேசி நிறுவன அதிகாரிகள் சாட்சியமளித்ததையடுத்து மேலதிக சாட்சிய விசாரணை டிசம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...