பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் ஆரம்பித்துவிட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது கடும் சீற்றத்துடனேயே மேடையேறிவருகின்றார். சிலர் ஜனாதிபதி ஆடையை தற்போதே தைத்துள்ளனர் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவை இலக்கு வைத்தே சஜித் இவ்வாறு உரையாற்றியுள்ளார். இதன்மூலம் எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவேதும் இல்லை எனவும், எதிரணியை பலவீனப்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews