நாடளாவிய ரீதியில் நாளையும் சில வலயங்களில் 11 மணித்தியாலங்களும், மேலும் சில வலயங்களில் 13 மணித்தியாலங்களும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
G,H,I,J,K,L
அதற்கமைய நாளை அதிகாலை 12 மணி முதல் அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
A,B,C,D,E,F
இதேவேளை, நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என 13 மணித்தியாலங்கள் A,B,C,D,E,F வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
T,U,V,W
நாளை அதிகாலை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் T,U,V,W வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
P,Q,R,S
நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் P,Q,R,S வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
M,N,O,X,Y,Z
நாளை அதிகாலை 5.30 முதல் காலை 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணிவரையும் 5 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் M,N,O,X,Y,Z வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment