மீண்டும் மின்வெட்டு?

Power cut

இன்று முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மேலதிக நீர் கிடைக்காவிட்டால் இன்று முதல் மீண்டும் மின்வெட்டை ஆரம்பிக்க நேரிடும் என மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version