அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் – என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,
” நாம் மக்களின் தேவையறிந்து அதற்கேற்ற வகையில் செயற்பட்டால், மக்கள் எமக்கு எதிராக ஹூ சத்தம் எழுப்பமாட்டார்கள்.
நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அரசுமீது அதிருப்தியில் உள்ளனர். மறுபுறத்தில் கேஸ் வெடிப்பும் இடம்பெறுகின்றது.
இவற்றுக்கு தீர்வு வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 20 ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் பயன்படுத்த வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews