” ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
கோப் குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் விமானக் கொள்வனவு இடம்பெறக்கூடாது என ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
#SriLankaNews