தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே!

SSRI LANKA

தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே!

நாட்டில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தபால் சேவைகள் இடம்பெறும் நாள்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனை தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசு பிரகடனப்படுத்திய நிலையில்  வாரத்தில் 6 நாள்கள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக அதனை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்படுகின்றன.

தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுக்கு அமைய வாரத்தில் திங்கள், செவ்வாய் , வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் தபால் அலுவலகங்கள் திறக்கும் எனவும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் அலுவலகங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version