தபால் மூல வாக்கு அட்டை விநியோகம் இன்று ஆரம்பம்!

election

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கு அட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாகவும், இன்றுமுதல் முதலே அவற்றை விநியோகிக்க உள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்தது.

மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 19ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இம்முறை 6 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு அவற்றில் 36 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் 28ஆம் திகதி வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, சுமார் 02 இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version