நெல்லின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

paddy

நெல்லின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

எதிர்வரும் காலங்களில் நாட்டில் நெல்லின் விலையை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திலேயே இது தொடர்பில் மத்வர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசி வியாபாரிகளிடம் இருந்து அரிசி கையிருப்புக்களை கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்கின்றமையால் தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டு நெல் கிலோவுக்கு அதிகபட்சமாக 50 ரூபாவும் சம்பா நெல் கிலோ ஒன்றுக்கு 52 ரூபாவும் என அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்தமையே இதற்குக் காரணம்  என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு நெல்லின் விலையில் மாற்றத்தைக் கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்  – என்றார்,

Exit mobile version