பொரளை தேவாலய கைக்குண்டு சம்பவம் – சந்தேகநபரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

image ab66736af3

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்திய அத்தியட்சகரின் வீட்டில் ஏராளமான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கி என்பன அடங்குவதாக  கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில்  கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போதே ஓய்வுபெற்ற வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

அதற்கமையவே வைத்தியர் கடந்த 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version