2 1
இலங்கைசெய்திகள்

செம்மணி புதைகுழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம்! மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்!

Share

சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை என ஜனநாயக இளைஞர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட தவிசாளர் லதுர்ஷான் வெள்ளசாமி தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியோ, தீர்வோ கிடைக்கப்படாத நிலையில் செம்மணி புதைக்குழியானது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் செம்மணி புதைகுழி தொடர்பாக அரசாங்கம் முழு கவனத்தை செலுத்துவதன் மூலம் செம்மணி புதைகுழிக்கான நிரந்தர தீர்வை பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், வடக்கு கிழக்கு மற்றும் இலங்கை வாழ் அனைத்து தமிழர்களின் உரிமைக்காக மலையக இளைஞர் என்றும் கைகோர்ப்போம் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...