ஜனாதிபதியால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உரை முடிந்ததும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் ஜனாதிபதியால் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் புறக்கணித்துள்ளனர்.
” தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி எதையும் குறிப்பிடவில்லை. கொள்கைகளை விட்டுவருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கொள்கை என்பது மக்கள் எமக்கு வழங்கிய ஆணை. அதனை மீறி செயற்படமுடியாது. எனவே, ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் அர்த்தம் புரிவில்லை.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment