image aa5ec14948
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு: ‘பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது, புதிய தீர்வுக்கு ஒத்துழைப்பு தேவை’

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (நவம்பர் 19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால், அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாகப் பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்பிடி மற்றும் காணிப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தித் தேவைகள் என்பன குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு, அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

TNA ஒத்துழைப்பு: வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன், ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...