3
இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் அரசியல் நிகழ்வு! அநுர அரசுக்கு எதிராக ரணில் கடும் விமர்சனம்

Share

கொழும்பு, காலிமுகத்திடலை அரசியல் நிகழ்வுக்குப் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை மீறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்று வருகின்றேன்.

அப்படியிருந்தம் ஊர் முழுதும் என்னைத்தான் ஆளுங்கட்சியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுகின்றனர்.

இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை. அதேபோல், மே முதலாம் திகதியன்று காலிமுகத்திடலில் பேரணியை நடத்துவதற்கு அநுர அரசு தீர்மானித்துள்ளது.

காலிமுகத்திடலில் தேர்தல் பரப்புரைகளையோ அல்லது அரசியல் நிகழ்வுகளையோ நடத்துவதில்லை என்று கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கை தவறானது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...