” ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலையே சஜித் பிரேமதாச முன்னெடுத்துள்ளார். ஹேமா பிரேமதாசவுக்கும், திரு நடேசனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதனை நிரூபிக்க முடியும். முடிந்தால் சஜித் விவாதத்துக்கு வரட்டும்.”
இவ்வாறு சவால் விடுத்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஆதரிக்க சஜித் அணி இணக்கம் தெரிவித்தது. இறுதி நேரத்தில் காலை வாரியது. இது ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் டீல். ஹேமா பிரேமதாசவும், திரு நடேசனும் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். என்ன பேசப்பட்டது, சந்திப்பு எங்கு நடந்தது என்பதை அம்பலப்படுத்த நாம் தயார். முடிந்தால் சஜித் விவாதத்துக்கு வரட்டும்.
சஜித் குடும்பத்தை ராஜபக்ச குடும்பம் காக்கின்றது. அதனால்தான் அரசை பாதுகாக்கும் நோக்கில் சஜித் வேட்பாளரை நிறுத்தினார். இதன் பின்னணியில் சூழ்ச்சி உள்ளது.” – என்றார்.
#SriLankaNews