tamilni 478 scaled
இலங்கைசெய்திகள்

என்றுமில்லாதவாறு களமிறங்கும் அரசியல் கூட்டணிகள்

Share

இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது இல்லாத அளவு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன.

அதேபோல் இம்முறை மும்முனைப் போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு பிரதான வேட்பாளர்கள் முழு வீச்சுடன் செயற்பட வேண்டிவரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2024 ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலை இலக்கு வைத்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதன்படி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, கூட்டணியில் உள்ள கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் அதிகரிப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறத்தில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் தமது கூட்டணியை விஸ்தரித்தே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பரந்தபட்ட கூட்டணியை அமைப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றது. நிமல் லான்சா, சுசில் பிரேமஜயந்த உட்பட மொட்டுக் கட்சியில் இருந்து விலகிய சில எம்.பிக்கள் இணைந்து புதிய கூட்டணி எனும் பெயரில் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.

இக்கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் பரந்தபட்ட கூட்டணிக்கான அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பிக்க ரணவக்க தலைமையிலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், விமல் வீரவன்ச தலைமையிலும், ரொஷான் ரணசிங்க தலைமையிலும் ஏற்கனவே கூட்டணிகள் உதயமாகியுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிகளில் பெரும்பாலான கூட்டணிகள் அரச தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறு கூட்டணிகள் உருவாகவில்லை எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் இக்கூட்டணிகள் ஆசன ஒதுக்கீட்டுகளின் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...