15 2
இலங்கைசெய்திகள்

அச்சுறுத்தி இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Share

அச்சுறுத்தி இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

அநுராதபுரம் அருகே சிறு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி இலஞ்சம் பெற முயன்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் அருகே கல்நேவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறு வர்த்தகர் ஒருவர் வேளாண்மை அறுவடை இயந்திரமொன்றை இன்னொருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

குறித்த இயந்திரம் விற்பனை செய்தவருடையது அல்லவென்றும், வேறொருவரின் இயந்திரத்தை திருட்டுத்தனமாக கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யாமல் இருப்பதாயின் ரூ. 30ஆயிரம் தமக்கு இலஞ்சமாக தரப்பட வேண்டுமென்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த வர்த்தகரை மிரட்டியுள்ளார்.

இது தொடர்பில் வர்த்தகர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் அவருக்கு ஒத்தாசை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் நேற்றையதினம் இலஞ்ச ஊழல் ஒழிப்புத் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...