போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!

photo 3

மக்கள் தன்னெழுச்சிப் போராட்டமான கோட்டாகோகம மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்து பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம அறவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.

போராட்டக்களத்தில் இருந்து பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவுபெறுவதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்பு​கைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version