இலங்கைசெய்திகள்

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

3 55
Share

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

ஜனவரி 2 ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜேசன் முகமது என்ற சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிறுவனின் தயார் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் 121/05A, மஃபூர் கிரசண்ட், களுத்துறை தெற்கு என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜேசன் முகமது, சுமார் 5 அடி உயரம் மற்றும் மெலிந்த உடல், நீண்ட முகம், சுருக்கமாக வெட்டப்பட்ட முடி மற்றும் லேசான தாடி கொண்டவர் என காவல்துறை அடையாளங்களை வெளியிட்டுள்ளதுடன், காணாமல் போன போது அவர் வெள்ளை சட்டை மற்றும் கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோரை  களுத்துறை தெற்கு காவல் நிலையம் 071-8591691 மற்றும் களுத்துறை காவல்துறை தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...