9 8
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பொலிஸ் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட நால்வர் கைது

Share

பயாகல பொலிஸ் பிரிவின் மக்கோன பகுதியில் பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த முறையற்ற விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நிலையத்தின் முகாமையாளரும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிலையத்தின் முகாமையாளரான சந்தேகநபர் 51 வயதுடையவர் எனவும் மூன்று பெண்களும் 23 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பேருவளை, அஹுங்கல்ல, கடவத்த மற்றும் ஹிங்குரான ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...