29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

Share

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (28.02.2026) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6 – 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கரு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண், எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...