rtjy 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தோற்கும்

Share

அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தோற்கும்

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்படும் என 43ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் சம்பிரதாய கட்சிகளுக்கு மக்கள் எழுச்சியுடன் முடிவு கட்டப்பட்டுள்ளது. அக்கட்சிகளின் உறுப்பினர்கள் என்னதான் நினைத்தாலும் மக்கள் ஆணை இனி கிடைக்கப்போவதில்லை.

2022 ஜூலை 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச மட்டுமல்ல சம்பிரதாய கட்சிகளும் அரசியல் ரீதியில் தோற்கடிக்கப்பட்டன. எதிர்க்கட்சியும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை.

இதனால்தான் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தனர் மற்றும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னும் அறிவிப்பு விடுக்கவில்லை.

2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் மொட்டு கட்சிக்கு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...