ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த ‘கேசரா’ என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பின், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான் இதன் இறப்புக்கான காரணம் என கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சிங்கத்தின் மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை விலங்கு வைத்தியசாலைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.
கேசரா என்ற சிங்கம் இறக்கும் போது அதற்கு நான்கரை வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews